திருச்சி மாநகராட்சிக்கு ஐகோர்ட் மதுரை கிளை
விதிகளை மீறிய நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க திருச்சி மாநகராட்சிக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சியில் கட்டிட விதிமீறல் உள்ள ஜவுளி கடைகள், ஓட்டல்கள், ஷாப்பிங் மால்களில் போதிய பாதுகாப்பு வசதி செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருச்சியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். கட்டட பாதுகாப்பு விதிப்படி அனுமதி பெற ஏற்கனவே விண்ணப்பித்த நிறுவனங்கள் தொடர்பான விவரங்களை தாக்கல் செய்யவும் ஆணையிடப்பட்டுள்ளது.