தேஜஸ் ரயில்..

தேஜஸ் ரயில் கொடைக்கானல் ரோடுக்கு பதிலாக திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நின்றுசெல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை-மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் ரயில் ஏப்ரல் 4ஆம் தேதி முதல் கொடைக்கானல் ரோடுக்கு பதிலாக திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நின்றுசெல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

தேஜஸ் ரயிலானது, சென்னையிலிருந்து மதுரைக்கு வியாழக்கிழமை தவிர பிற நாள்களில் காலை 6 மணிக்கு கிளம்பும், அதேபோல் மதுரையிலிருந்து சென்னைக்கு மாலை 3 மணிக்கு கிளம்பும். இந்த ரயிலானது திருச்சி, கொடைக்கானல் ரோடு ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே வழக்கமாக நின்றுசெல்லும்.

இந்நிலையில், வருகின்ற ஏப்ரல் 4ஆம் தேதி முதல் சோதனை முயற்சியாக கொடைக்கானல் ரோடு ரயில் நிலையத்திற்கு பதிலாக திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நின்றுசெல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.