கிண்டி ரேஸ் கோர்ஸ்
கிண்டி ரேஸ் கோர்ஸ் இடத்துக்கான குத்தகையை ரத்து செய்வது தொடர்பாக நோட்டீஸ் அளித்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கிண்டி ரேஸ் கிளப்புக்கு சென்னை மாகாண அரசு 1946-ல் 160 ஏக்கர் 86 சென்ட் நிலத்தை 99 ஆண்டு குத்தகைக்கு கொடுத்தது. குத்தகை பாக்கியை செலுத்தாததால் ஐகோர்ட் உத்தரவுப்படி குத்தகையை தமிழ்நாடு அரசு ரத்துசெய்தது. குத்தகையை ரத்து செய்த தமிழ்நாடு அரசின் உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் ரேஸ் கோர்ஸ் கிளப் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த கால அவகாசம் கொடுக்காமல் சீல் வைக்கப்பட்டுள்ளது என ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் சார்பில் வாதிடப்பட்டது. கிண்டி ரேஸ் கோர்ஸ் கிளப்புக்கு நோட்டீஸ் வழங்கி காலி செய்வதற்கான அவகாசம் தர வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்தது. இடத்தை காலி செய்வதற்கான அவகாசம் வழங்கிய பின் நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து குத்தனை ரத்து குறித்து நோட்டீஸ் அளித்து காலி செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
எனவே, குத்தகை ரத்து குறித்த நோட்டீஸ் அனுப்பி வைக்கப்படும் என அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் வாதிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.