பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு உலகம்
போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். கால்பந்து உலகில் பல சாதனைகளைப் படைத்திருக்கும் ரொனால்டோ படைக்காத சாதனை, தொட முடியாத ஒரு கோப்பை என்றால் அது உலகக்கோப்பை தான். கிளப் போட்டிகளில் கிட்டத் தட்ட அனைத்து கோப்பையும் வென்று விட்டாலும், உலகக் கோப்பையில் போர்ச்சுகல் அணி காலிறுதி வரை வந்தாலும் அதை கடந்து அரைஇறுதிப் போட்டிக்கு இது வரை தகுதி பெற்றதே இல்லை. இந்தநிலையில், ரொனால்டோ கால்பந்து உலகில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
நேஷன்ஸ் லீக் போட்டியில் குரோஷியாவுக்கு எதிராக போர்ச்சுகல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் 34-வது நிமிடத்தில் ரொனால்டோ ஒரு கோலை பதிவு செய்தார். இதன் மூலம் கால்பந்து உலகில் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார் ரொனால்டோ. கால்பந்து வரலாற்றில் இந்த சாதனையை நிகழ்த்தியவர் ரொனால்டோ மட்டுமே. இவருக்கு அடுத்தபடியாக மெஸ்சி 838 கோல் அடித்து 2-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.