ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்திலிருந்து
கரூர் மாவட்டம், புகளூர் வட்டம், நொய்யல் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்திலிருந்து, நொய்யல் கால்வாய்க்குட்பட்ட பாசன நிலங்களுக்கு 09.09.2024 முதல் 07.12.2024 வரையிலான 90 நாட்களில் முறை வைத்து 48 நாட்களுக்கு சிறப்பு நனைப்பிற்கு (Special Wetting) மொத்தம் 414.720 மில்லியன் கன அடிக்கு மிகாமல், தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், கரூர் மாவட்டம், புகளூர் மற்றும் மண்மங்கலம் ஆகிய வட்டங்களிலுள்ள 19480 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.