மார்க்கஸ் ஸ்டாய்னிஸின் சாதனையை
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்காக அதிவேக அரைசதம் விளாசியவர் என்ற மார்க்கஸ் ஸ்டாய்னிஸின் சாதனையை டிராவிஸ் ஹெட் சமன்செய்தார். 2022ல் இலங்கைக்கு எதிரான போட்டியில் 17 பந்துகளில் ஸ்டாய்னிஸ் அரைசதம் விளாசி இருந்தார்.
நேற்று நடைபெற்ற ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் முதல் டி20 போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டகாரரான டிராவிஸ் ஹெட் 25 பந்துகளில் 80 ரன்கள் குவித்து அதிரடி காட்டினார்
இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்காக அதிவேக அரைசதம் விளாசியவர் மார்க்கஸ் ஸ்டாய்னிஸின் சாதனையை டிராவிஸ் ஹெட் சமன் செய்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்காக, ஸ்டாய்னிஸ் 17 பந்துகளிலும், டேவிட் வார்னர் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் 18 பந்துகளிலும் அரைசதம் விளாசியுள்ளனர்.
நேற்று நடைபெற்ற போட்டியில் 17 பந்துகளில் அரைசதம் அடித்ததன் மூலம் மார்க்கஸ் ஸ்டாய்னிஸின் சாதனையை டிராவிஸ் ஹெட் சமன் செய்துள்ளார். இவர் 80 ரன்களில் 2 ரன்கள் மட்டுமே ஓடி எடுத்துள்ளார். மீதி 78 ரன்கள் பவுண்டரி, சிக்ஸர்களில் வந்தவையாகும்