செகந்திராபாத் – விஜயவாடா வழித்தடத்தில் ரயில்கள் இயக்க
தெலங்கானாவில் பெய்த கனமழையில் ஏற்பட்ட வெள்ளத்தால் அந்தரத்தில் தொங்கிய தண்டவாளத்தை புனரமைக்கும் பணிகள் நிறைவடைந்து ரயிலில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இன்று மாலை முதல் செகந்திராபாத் – விஜயவாடா வழித்தடத்தில் ரயில்கள் இயக்க அனுமதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்