அமெரிக்காவில் நடந்த சாலை விபத்தில் தமிழ்நாட்டை

அமெரிக்காவில் நடந்த சாலை விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த இளம்பெண் உட்பட 4 இந்தியர்கள் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த 30ம் தேதி லாரி மோதியதால் அடுத்தடுத்து 5 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துகுள்ளாகின.

இதில் SUV வாகனம் ஒன்று எரிந்து சம்பலுமானது. அந்த வாகனத்தில் இந்தியாவை சேர்ந்த 4 பேர் பயணித்தது தற்போது தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த தர்ஷினி வாசுதேவன், ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆரியன் ரகுநாத், ஃபரூக் ஷேக், லோகேஷ் பலச்சர்லா ஆகியவர்கள் இந்த விபத்தில் உடல் கருகி உயிரிழந்தனர்.

சென்னையை சேர்ந்த தர்ஷினி கடந்த 3 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். எம்.எஸ். படித்து முடித்த நிலையில், அவருக்கு வேலை கிடைத்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் அவர் பென்டன்வில்லில் உள்ள தம்முடைய உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். அதற்காக கார் பகிர்வுச் செயலி மூலம் பயணித்துள்ளார். வெவ்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் இந்த செயலி மூலமாக ஒரே காரில் ஒன்றாக பயணித்து அதற்கான தொகையை கார் உரிமையாளர்களிடம் அளிக்கலாம்.

அந்த வகையில் தர்ஷினி உடன் மற்ற 3 பேரும் அதே செயலி மூலமாக ஒன்றாக பயணம் செய்திருக்கிறார்கள். கடந்த 31ம் தேதி அமெரிக்காவில் உள்ள தமது மகள் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை என்று தர்ஷினியின் தந்தை வாசுதேவன், தம்முடைய எக்ஸ் பக்கத்தில் ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கரை டேக் செய்து பதிவிட்டு இருந்தார். இந்நிலையில், உயிரிழந்தவர்களின் விவரம் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.