டீன் பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும்
தென் மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள டீன் பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும் என்று ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை, திருச்சி, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதல்வர்களை நியமிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதல்வர்களை நியமிப்பதில் காலதாமதம் ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.