அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சவால்
மாநில பாடத்திட்டம்தான் சிறந்தது என ஆளுநருக்கு நிரூபிக்கத் தயார் :
கல்வித்தரம் குறித்து ஆய்வு செய்ய விரும்பினால், மாநில கல்வி திட்டத்தில் படித்த மாணவர்களிடம் ஆளுநர் பரிசோதித்து கொள்ளட்டும் என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ஒன்றிய கல்வி கொள்கையுடன் ஒப்பிடும் போது மாநில கல்வி கொள்கையின் தரம் குறைவாக உள்ளதாக ஆளுநர் ரவி பேசியுள்ளார். இந்த நிலையில், மாநில அரசின் பாடத்திட்டம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவியின் விமர்சனத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி கொடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை விட மாநில பாடத்திட்டம் மேலானது.