பெண்ணியல் பட்டயப்படிப்பு…
அண்ணாமலை பல்கலை கழகத்தில் துவக்கம்: பெண்ணியல் பட்டயப்படிப்பு…
சிதம்பரம் : அண்ணாமலை பல்கலைக் கழக தொலைதுார கல்வி இயக்ககத்தில், பெண்ணியல் பட்டயப்படிப்பு துவங்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக செய்திக்குறிப்பு:கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம் தொலைதுார கல்வி இயக்கக வரலாறு துறையில், பெண்ணியல் பட்டயப்படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இப்படிப்பில் சேர ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். இந்த பட்டயப்படிப்பு, பெண்கள் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெண்கள் ஆளுமைப்பண்புகளையும், சுய வேலை வாய்ப்பும் பெற இந்த படிப்பு வழிகாட்டுகிறது.இப்படிப்பில் ஆண், பெண் இருபாலரும் சேரலாம். வயது வரம்பு இல்லை. தொலைதுார கல்வி இயக்ககத்தில் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ அல்லது இணையதள வழியிலோ சேரலாம்.
A. அப்துல் சமது
தலைமை செய்தி ஆசிரியர்