இருசக்கர வாகனத்தை வெயிலில் நிறுத்தினால் பொட்ரோல் ஆவியாகுமா…
இந்த கேள்வியும் ,இதனை தொடர்ந்து சில வெடிக்கும் வாகனங்களின் பதிவும் வாட்சப்பில் உலா வந்த வண்ணமுள்ளது .இன்று இதற்க்கு தீர்வு காணலாம் .
இரு சக்கர வாகனத்தின் எரிபொருள் டேங்க் மூடியில் முன்பெல்லாம் ஒரு சிறு குண்டூசி முனையளவுக்கு சிறு துளையிருக்கும் .
வெயிலில் வாகனங்களை நிறுத்தும்போது ஆவியாகும் பெட்ரோல் சிறிதளவு அழுத்தத்தை அதிகரிக்கும் .அந்த சமயம் சிறிதளவு பெட்ரோல் ஆவியானது வெளியேற முயற்சிக்கும் .அப்போது குக்கரின் விசில் வழியாக நீராவி வெளியேறுவதுபோல சிறிதளவு பெட்ரோல் ஆவி அந்த சிறு துளை வழியாக வெளியேறும் .
அதே வழியாக வாகனம் குளிர நேர்கையில் வெற்றிடம் சமாளிப்பதற்காக சிறிதளவு காற்று உள்நுழையும் .
தற்போதுள்ள வாகனங்களில் அந்த குறைபாடு களையப்பட்டுள்ளது.
பெட்ரோல் டேங்கில் பெட்ரோல் போடும் பெரிய துளையை மூடியில் இருக்கும் ரப்பரானது ஆவியாகமலும் ,பெட்ரோல் வெளியே சிந்தாமலும் அழுத்தமாக மூடியிருக்கும் .அந்த மூடியிலும் ,டேங்கிலும் ஒரு சிறு தீக்குச்சி பருமனுக்கு சிறு துளையிருக்கும் .
அதன் வழியாக வெயிலில் நிறுத்திய வாகனத்தின் பெட்ரோல் ஆவியாக நேர்ந்தால் சிறிதளவு அழுத்தம் காரணமாக அந்த சிறு துளையின் மூலமாக வெளிவந்து டேங்கில் இருக்கும் சாவி துவாரத்தின் வழியாக வெளியேறிவிடும் .
பாதுகாப்பாக .
அதனால் பயமொன்றும் தேவையில்லை .குக்கர் வெடிப்பதுபோல இரு சக்கரவாகனங்கள் வெடிக்கவும் செய்யாது .
ரிசர்ச் அண்ட் டெவெலப்மென்ட்(R&D ) எனப்படும் இருசக்கரவாகனத்தின் தயாரிப்பில் பங்குபெறும் குழுவானது வாகனத்தின் ஒவ்வொரு பாகத்தையும் முறையாக ஆராய்ந்து இதுபோன்ற குறைபாடுகளை களைந்தபின் தான் வாகனங்கள் தயாரிக்கப்பட்டு சந்தைக்கு வருகின்றது .
அடுத்தமுறை எரிபொருள் நிரப்பும்போது அந்த துளையை கவனியுங்கள்…