நாகர்கோவில் – தாம்பரம் இடையிலான வாராந்திர சிறப்பு ரயில்
நாகர்கோவில் – தாம்பரம் இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் சேவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் இருந்து செப். 1, 8, 15, 22, 29, அக்.6, 13, 20, 27, நவ.3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் இரவு 11.15 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். அதேபோல் மறுமார்க்கத்தில், தாம்பரத்தில் இருந்து செப்.2, 9, 16, 23, 30, அக்.7, 14, 21, 28, நவ.4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.30 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.