ரஜினிகாந்த் நடிக்கும் #Coolie திரைப்பட அப்டேட்! சௌபின் சாகிர் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியீடு!
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் கூலி திரைப்படத்தின் சௌபின் சாகிர் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியாகியுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171 படமாக கூலி உருவாகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இயக்கத்தில் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிரின் போஸ்டரை படக்குழு பகிர்ந்துள்ளது. இதில், தயாள் என்கிற கதாபாத்திரத்தில் சௌபின் நடிப்பதாக அந்த போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது.