Paytm சினிமா டிக்கெட் புக்கிங் பிசினஸை கையில் எடுத்த Zomato.. விரைவில் வரும் புதிய அம்சம்!
இந்தியாவில் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமாக திகழும் சொமேட்டோ நிறுவனம் சினிமா டிக்கெட் முன்பதிவுத் தொழிலில் கால்பதித்துள்ளது.சொமேட்டோவின் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன் Ltd நிறுவனம் பிரபல ஆன்லைன் பணப்பரிவார்த்தை செயலியான பே.டி.எம். இல் உள்ள சினிமா மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் டிக்கெட் முன்பதிவு பிசினஸ் கட்டமைப்பை ரூ.2,048 கோடி ரூபாய்க்கு வாங்க உள்ளதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த பரிவர்த்தனை முடிவடைந்து வரும் செப்டெம்பர் 30 முதல் சொமேட்டோ செயலியின் மூலம் டிக்கெட் புக்கிங் சேவைகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.சொமேட்டோ செயலியில் அறிமுகமாகும் book now, sell anytime அம்சத்தின் மூலம் சினிமா, விளையாட்டு மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான ஆன்லைன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். சொமேட்டோ இந்த கட்டமைப்பை வாங்கியிருந்தாலும், பயனர்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் அடுத்த 12 மாதங்களுக்கு பே.டி.எம். செயலியிலும் டிக்கெட் முன்பதிவு நடைபெறும் என்று ஒன் 97 கம்யூனிகேஷன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.