உயிரைப் பணயம் வைக்கும் விண்வெளி வீரர்களுக்கு நாசா கொடுக்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

விண்வெளி அறிவியலில் கோலோச்சும் உலகின் மிகப்பெரிய ஆராய்ச்சி நிறுவனமாக நாசா உள்ளது. நிலவில் முதல் முறையாகக் கால்பதித்து முதல் விண்வெளி ரகசியங்களை அதிநவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் வெளிக்கொணரும் நாசாவில் விஞ்ஞானியாக, விண்வெளி வீரராக வேலை பார்ப்பது என்பது சிறுவயது முதலே அறிவியலில் ஆர்வம் கொண்டது பலரது விருப்பமாக இருக்கும். அதிலும் விண்வெளி வீரர் வேலை என்பது மிகவும் துணிச்சல் மற்றும் கடின உழைப்பைப் கோரும் வேலையாக உள்ளது. கல்பனா சாவ்லா தொடங்கி சுனிதா வில்லியம்ஸ் வரை இந்தியர்களும் நாசாவில் முக்கிய பங்காற்றி உள்ளனர். பூமிக்கு திரும்புவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் தற்போது சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸ் சிக்கியுள்ளது விண்வெளி வீரர்களின் வேலையில் உள்ள ஆபத்துகளுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. இத்தகு கடினமான வேலையில் ஈடுபடும் நாசா விண்வெளி வீரர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குவார்கள் என்ற கேள்வியும் பலரிடத்தில் எழுந்திருக்கக் கூடும். அந்த வகையில் நாசா அமைப்பின் இணையத்தில் உள்ள 2024 ஆம் ஆண்டுக்கான தரவுகளின்படி, விண்வெளி வீரர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு இந்திய மதிப்பில் 1.27 கோடி ரூபாய் [$152,258] சம்பளமாக வழங்கப்படுகிறது. அதாவது விண்வெளி வீரர்களுக்கு சுமார் 10 லட்சத்துக்கு 58 ஆயிரம் ரூபாய் மாத சம்பளமாகக் கிடைக்கிறது. ரேங்க் படிநிலையை பொறுத்து இந்த தொகை மாறுபடும். மேலும் இந்தியாவில் விண்வெளி வீரர்களுக்கு மாதம் ரூபாய் 4 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.