கடந்த சில மாதங்களுக்கு முன்பு
youtube மூலமாக மிகவும் பிரபலமடைந்த பிஜிலி ரமேஷ் அவர்களுடைய நேர்காணல் ஒன்றை பார்த்தேன் அதில் அவர் கூறியது
பிஜிலி ரமேஷ் :-
” என்னிக்கோ செஞ்ச தப்புகளுக்காக
இப்ப நான் வலியை அனுபவிக்குறேன்
இப்ப நான் சந்தோசமா வாழணும்னு ரொம்ப ஆசையாருக்கு.
ஆனா அதெல்லாம் ரொம்ப நாளைக்கு நீடிக்காதுன்னு எனக்கே புரியுதுனு ” ஒரு இன்டர்வியூல அவரே சொல்லி இருந்தாரு
நான் அதிகமா குடிச்சிட்டு இருந்திருக்கேன்தான்
ஆனா இப்ப அதை நிறுத்திட்டேன்.
அப்ப செஞ்ச தப்புக்கு அதுக்கான தண்டனைய பூரா இப்பதான் அனுபவிக்குறேன்.
எனக்கு ரொம்ப நெருங்கின நண்பர்களா இருந்தவங்க கூட நான் இப்டி படுத்த படுக்கையா கிடக்குறத பார்த்தும் ஆறுதல் சொல்ல கூட வரல.
சுத்தி உள்ளவங்களும் எவ்ளோ நாளு அவங்க வேலைய விட்டு எனக்காக உதவி செய்வாங்கன்னு தெரியல.
எல்லாத்துக்கும் காரணம் எப்பவோ என் கிட்ட இருந்த பாழாப்போன அந்த குடிப்பழக்கம்தான்.
தினமும் காலை – மதியம் – மாலை என
மூன்று வேலையும்
ஒரு கோட்டராவது குடிப்பேன்
இதுல நேரடியா பாதிக்கப்பட்டவனா சொல்றேன் யாருக்காச்சும் அந்த பழக்கம் இருந்தா உடனே அதை நிறுத்த பாருங்க
ஏன்னா அது உங்க உடம்ப அழிக்குறதோட சேர்த்து உங்க குடும்பத்தோட நிம்மதியையும் காணாம போக வச்சிடும்.
இது சமீபமா ஏதோ ஒரு YouTube சேனலுக்கு பிஜிலி ரமேஷ் கொடுத்த பேட்டி.
எப்போ உணர்ந்து நிறுத்துறோமோ அப்பதான் அந்த குடிச்ச குடி வேலையை காட்டும் போல. பாவம் மனுசன் எவ்ளோ சீக்கிரமா இந்த உலகத்துக்கு தெரிஞ்சாரோ அதை விட வேகமா இந்த உலகத்த விட்டே கடந்து போயிட்டாரு.
மது வீட்டுக்கும் நாட்டுக்கும் நம் உடலுக்கும் கேடு ❌
இவருக்கும் நமக்கும் எந்தவித நேரடி தொடர்பும் இல்லை என்றாலும் ஏதோ ஒரு வகையில் நம்மை மகிழ்வித்த நபர் 45 வயதில் மறைவது என்பது மிகவும் வருந்தத்தக்க ஒன்று இவரது மறைவின் மூலமாக குடிப்பழக்கம் இருக்கும் ஒருவராவது திருந்தினால்
அதுவே அவரது youtube இல் தெரிவித்த அவரது வலியின் உண்மை தன்மையை புரிந்து கொண்டதற்கு சமம்