மனு பாக்கர் மனம் திறந்த பேட்டி
சச்சின், டோனி, கோஹ்லியுடன் நேரம் செலவிட ஆசை… உலகத்தில் எனக்கு மிகவும் பிடித்த வீரர் உசைன்போல்ட்தான்:
நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கிச் சுடுதல் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலம், கலப்பு இரட்டையர் பிரிவில் மற்றொரு வெண்கலப் பதக்கம் என ஒரே ஒலிம்பிக் தொடரில் 2 பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார் மனு பார்க்கர். இதன் மூலம் இந்தியாவின் பட்டி தொட்டி எங்கும் மனு பார்க்கர் பிரபலமடைந்துள்ளார். பார்க்கருக்கு கோடிகளை கொட்டி கொடுத்து விளம்பர படங்களில் நடிக்க வைக்க விளம்பர நிறுவனங்கள் போட்டி போடுகின்றனர்.
ஒலிம்பிக் தொடருக்கு முன்பு மனு பாக்கருக்கு ரூ.20 லட்சம் வரை மட்டுமே கொடுக்க முன்வந்த விளம்பர நிறுவனங்கள் அவரது பிராண்ட் வேல்யூ 330 மடங்கு அதிகரித்த நிலையில், தற்போது ரூ.2 கோடி வரை ஊதியம் கொடுக்க தயாராக உள்ளன. இதனிடையே இந்தியாவின் பல்வேறு நட்சத்திரங்களை சந்தித்து வரும் மனு பாக்கர், பல்வேறு மாநிலங்களுக்கு பயணித்து சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பேசி வருகிறார்.