கொள்கை முடிவை அமல்படுத்த முடியாமல் தவிக்கும் பாஜக தலைவர்கள்
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து கொண்டே 3 மாதங்களில் 4 கொள்கையை எதிர்த்த ஒன்றிய அமைச்சர்: கொள்கை முடிவை அமல்படுத்த முடியாமல் தவிக்கும் பாஜக தலைவர்கள்
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து கொண்டே கடந்த 3 மாதங்களில் 4 முக்கிய கொள்கையை ஒன்றிய அமைச்சர் சிராக் பஸ்வான் எதிர்த்ததால், பாஜக தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர். ஒன்றியத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி அரசு அமைந்து 3 மாதங்கள் நெருங்கும் நிலையில், ஒன்றிய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சியின் (ராம்விலாஸ்) தேசிய தலைவருமான சிராக் பஸ்வான், தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு எதிராக மாறுபட்ட கருத்தை தெரிவித்து வருகிறார். கடந்த 3 மாத இடைவெளியில் நான்கு முறை, தனது மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளார். நேற்று அவர் அளித்த பேட்டியில், ‘நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்’ என்று கூறினார்.