கடலில் மூழ்கிக் கொண்டிருந்த சரக்கு கப்பலில் இருந்து 11 பேர் மீட்பு
கடலில் மூழ்கிக் கொண்டிருந்த சரக்கு கப்பலில் தத்தளித்த 11 பேரை கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டனர். கொல்கத்தாவில் இருந்து போர்ட் பிளேர் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது. இந்திய கடலோர காவல் படையின் 2 கப்பல்கள் மற்றும் டோர்னியர் விமானம் மூலம் 11 பேர் மீட்கப்பட்டனர். சாகர் தீவின் தெற்கே 90 நாட்டிகல் மைல் தொலைவில் சரக்கு கப்பலில் இருந்து 11 பேர் மீட்கப்பட்டனர்.