தமிழ்நாடு மின்வாரிய பணியாளர்கள் கூட்டமைப்பு
நிர்வாகிகள் தேர்தலை நடத்த அதிகாரியை நியமித்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரியாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாஸை நியமித்து ஐகோர்ட் உத்தரவிட்டது. கூட்டமைப்பின் செயல்பாடுகளில் தலையிட பழைய நிர்வாகிகளுக்கு தடை விதிக்கக் கோரி புதிய நிர்வாகிகள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் கூட்டமைப்பின் சட்ட திட்டங்களில் ஏராளமான குறைபாடுகள் உள்ளன என நீதிபதி டீக்காராமன் கூறியுள்ளார்.✳️✳️