சென்னை காசிமேடு மீனவர்கள் மீட்டனர்
விசாகப்பட்டினம் அருகே கடலில் தத்தளித்த 4 இலங்கை மீனவர்களை மீட்டனர் சென்னை காசிமேடு மீனவர்கள் மீட்டனர். நடுக்கடலில் பழுதடைந்த ஒரு படகில் இலங்கை மீனவர்கள் 4 பேர் தத்தளித்ததைப் பார்த்து, காசிமேடு மீனவர்கள் மீட்டனர். இலங்கை மீனவர்கள் 4 பேரையும் மீட்டு தங்கள் படகிலேயே 10 நாட்கள் தங்க வைத்துள்ளனர். சென்னை திரும்பி வரும்போது படகில் 4 இலங்கை மீனவர்கள் இருப்பது குறித்து கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவித்தனர். 4 இலங்கை மீனவர்களிடம் ஒன்றிய உளவுத்துறை, குடியேற்றத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.