புதுச்சேரி உப்பளம் தொகுதி நேத்தாஜி நகர்

புதுச்சேரி உப்பளம் தொகுதி நேத்தாஜி நகர் 3 சமுதாய நலக்கூடத்தில் அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்காக முதல் தளம் அமைத்தல் பணிக்காக சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய்21,54,900/-தொகையின் ஒப்பந்த அடிப்படையில் உப்பளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர்
திரு. V. அனிபால் கென்னடி அவர்கள் பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தார்.:

புதுச்சேரி உப்பளம் தொகுதி, நேத்தாஜி நகர் 3-ல் உள்ள சமுதாய நலக் கூடத்தில் அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள் கல்வி பயில்வதற்காக முதல் தளம் அமைத்தல் பணிக்கான ஒப்பந்தத்தொகை : ரூபாய் 21,54,900/- உப்பளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர்
திரு. V. அனிபால் கென்னடி அவர்கள் தலைமையில்
புதுச்சேரி நகராட்சி ஆணையர் திரு. M.கந்தசாமி அவர்கள் , நகராட்சி செயற்பொறியளர் திரு. A. சிவபாலன் அவர்கள், நகராட்சி உதவிப் பொறியாளர் திரு. R.யுவராஜ் அவர்கள் இளநிலைப் பொறியாளர் திரு. S.சண்முகசுந்தரம் அவர்கள் முன்னிலையில் கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை போட்டு சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் தொடங்கி வைத்தார். இப்பள்ளி முதலில் பெரியப்பாளையத்தம்மன் ஆலயத்திற்கு சொந்தமான இடத்தில் இயங்கி வந்தது .இந்த நிலையில் ஆலயம் விரிவாக்கம் செய்து கோவில் பயன்பாட்டிற்கு இடம் தேவைப்பட்ட காரணத்தால் ஊர் பஞ்சாயத்தார்கள் கேட்டுக் கொண்டதிற்கு இணங்க அந்த இடத்தை காலி செய்யும் சூழல் ஏற்பட்ட நிலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு எந்த சூழ்நிலையிலும் கல்வி கற்க தடை ஏற்பட்டு விடக்கூடாது என்ற காரணத்தால் சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் கல்வித் துறையை அணுகினார் .மேலும் நகராட்சி துறையின் அனுமதியுடன் கட்டி முடித்து இயங்காமல் இருந்த சமுதாய நலக்கூடத்தில் பள்ளி மாணவர்கள் மாணவியர்கள் பயில இடம் வேண்டி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் .அதிகாரிகளிடம் சமுதாயநலக்கூடத்தை கேட்டு இருந்தனர்.தற்பொழுது அந்த சமுதாய நலக்கூடத்தில் தான் பள்ளி இயங்கி வருகின்றது .இருப்பினும் மாணவ மாணவியர்களுக்கு அந்த இடம் போதுமானதாக இல்லாத காரணத்தால் மேல்தளம் அமைத்து பள்ளியை விரிவாக்கம் செய்து அவர்களுக்கு படிக்க ஏதுவாக மாணவச் செல்வங்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு முழு முயற்சி செய்த சட்ட மன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் நகராட்சி மூலம் பணிக்கான ஏற்பாட்டினை சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் முழுமுயற்சி மேற்கொண்டு ஏற்பாடுகள் செய்து கொடுத்தார்.இப்பணியினைப் பாராட்டி தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள்
மற்றும் ஊர் பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர். அவருடன் தொகுதி செயலாளர் சக்தி வேல், தொகுதி துணை செயலாளர் ராஜி, கிளை செயலாளர்கள் காத்தலிங்கம்,செல்வம், காளப்பன், விநாயகமூர்த்தி, ராகேஷ், கழக சகோதரர்கள் கண்ணன், பியார், மகளிர் அணி ஜோஸ்லின், பொன்னி, வைத்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.