பாஜக ஆலோசனை கூட்டம்..

திருப்பூர் மாவட்டத்தில் பாஜக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது திருப்பூருக்கு வருகை புரிந்த மகளிர் அணி தேசியத் தலைவர் திருமதி வானதி சீனிவாசன் அவர்கள் அவினாசி சாலையில் உள்ள RK ரெசிடென்ட்ஸி ஹோட்டலில் பட்ஜெட் 2021 – 22 குறித்து தொழில் அமைப்புகளின் நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். மாவட்ட தலைவர் திரு செந்தில்வேல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் RSS மூத்த தலைவர் திருஆர்ம்ஸ்டார்ங் பழனிச்சாமி மற்றும் திருப்பூரை சேர்ந்த பனியன் தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள், பிற தொழில்துறை நிர்வாகிகள் கலந்து கொண்டு பட்ஜெட் மீது தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
பட்ஜெட் குறித்து அவர்களின் சந்தேகங்களுக்கு திருமதி வானதி சீனிவாசன் அவர்கள் விளக்கங்களை அளித்தார். மேலும் தொழில்துறையினரின் கோரிக்கைகளை மத்திய நிதியமைச்சர் மற்றும் ஜவுளித்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்தார்.i
தொழில் பிரிவு மாவட்ட தலைவர் திரு இராஜேந்திர குமார் தலைமையில் தொழில் பிரிவு நிர்வாகிகள் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். தமிழ்மலர் மின்னிதழ் செய்திகளுக்காக நிருபர் அரவிந்த் குமார்

Leave a Reply

Your email address will not be published.