அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிசுக்கு ஆதரவு
அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிசுக்கு ஆதரவு அதிகரித்துள்ளதால் வெற்றி வாய்ப்பு என கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. அதிபர் தேர்தல் நவ.5-ம் தேதி நடைபெற உள்ளது; சிகாகோவில் நடக்கும் மாநாட்டில் முறைப்படி வேட்பாளராக அறிவிக்கப்படுவார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் களமிறங்கி உள்ளார்.