அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு..
கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் 8-ம் தேதி தொடங்க உள்ளதாகவும், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் மார்ச் மாதம் 15-ம் தேதியும், 3-ம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஏப்ரல் 5-ம் தேதியும் தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. மாணவர்கள் கல்வி பாதிக்கப்பட கூடாது என்றும், கல்வியின் மீதான ஆர்வத்தை அதிகாரிக்கும் வகையிலும், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்த அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டன.
செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைன் முறையிலேயே கடும் கட்டுப்பாட்டுகளுடன் நடத்தப்பட்டன.
ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, இறுதியாண்டு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் டிசம்பர் 6-ம் தேதி தொடங்கப்பட்டது. 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளும் கடந்த 19-ம் தேதி அன்று திறக்கப்பட்டது.
மேலும், பொறியியல் கல்லூரி 2 மற்றும் 3-ம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் பிப்ரவரி 18-ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருந்தது.
இந்நிலையில், கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் 8-ம் தேதி தொடங்க உள்ளதாகவும், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் மார்ச் மாதம் 15-ம் தேதியும், 3-ம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஏப்ரல் 5-ம் தேதியும் தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழக அறிவித்துள்ளது.
S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்.