கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கில் கைது
கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய்-ராயிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராயிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கோரி சிபிஐ மனு அளித்திருந்தது. சிபிஐ மனுவை விசாரித்த கொல்கத்தா நீதிமன்றம், சஞ்சய் ராயிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி வழங்கியுள்ளது. நீதிமன்ற அனுமதியை அடுத்து சஞ்சய் ராயிடம் நாளை உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சிபிஐ அதிகாரிகள் நேற்று சஞ்சய் ராயிடம் உளவியல் சோதனைகளை நடத்தியுள்ளனர்.