7.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்க
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தின் கிழக்குக் கடற்கரையில் 7.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்க ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஷிவேலுச் எரிமலை வெடித்தது. ரஷ்யா நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை காலை 7.10 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம், 18 மைல் ஆழத்தில் தாக்கியது. இதன் விளைவாக பெட்ரோபாவ்லோவ்ஸ்க் -கம்சாட்ஸ்கி நகரில் உள்ள கட்டிடங்களில் “கடுமையாக குலுங்கியது.
இந்த நிலநடுக்கமானது மற்றுமொரு வலுவான நிலநடுக்கத்திற்கான முன்னோட்டமாக இருக்கலாம் என ரஷ்ய விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். 9.0 ரிக்டர் அளவுடன் “24 மணி நேரத்திற்குள்” இரண்டாவது நிலநடுக்கம் வரக்கூடும் என்று எரிமலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது