இலங்கை காங்கேசன் துறைக்கு நேற்றுமுன்தினம்
நாகையிலிருந்து இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு நேற்றுமுன்தினம் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இதில் இலங்கை தமிழர்கள் 5 பேர் உட்பட 50 பயணிகள் பயணம் செய்தனர். அந்த கப்பல் நேற்று மாலை இலங்கையில் இருந்து நாகை வந்தது. அதில் இலங்கையைச் சேர்ந்த 15 பேர், இந்திய பயணிகள் 10 பேர் என 25 பயணிகள் வந்தனர்.
பயணிகள் குறைவாக முன்பதிவு செய்திருந்தாலும் தினந்தோறும் இரு மார்க்கத்திலும் பயணிகள் கப்பல் இயக்கப்படும் எனவும், காலை 8 மணிக்கு புறப்படும் கப்பல் பகல் 12 மணிக்கு இலங்கையை சென்றடையும். அதே நாள் மதியம் 2 மணிக்கு இலங்கையிலிருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு நாகையை வந்தடையும் என கப்பல் நிர்வாகம் தெரிவித்துள்ளது
இந்நிலையில் ஞாயிற்று கிழமையான இன்று வெறும் 8 பேர் மட்டுமே இலங்கை செல்ல டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர். அந்த 8 பேருடன் இன்று காலை கப்பல் இலங்கைக்கு புறப்பட்டு சென்றது. கப்பலில் பணியாளர்கள் மட்டும் சுமார் 15 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.