தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு
மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது. தமிழ்நாடு மருத்துவ தேர்வு குழு மூலமாக நடத்தப்படும் கலந்தாய்விற்கான மெரிட் லிஸ்ட்டை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிடுகிறார். ஆக.21ம் தேதி ஆன்லைன் வழியாக பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.