பேருந்துகளில் சாதிய பாடல்களை ஒலிபரப்பத் தடை.
திருநெல்வேலி மாநகர பேருந்துகளில் சாதி ரீதியான பாடல்களை ஒலிபரப்பக் கூடாது.
மீறி செய்தால் ஓட்டுநர், நடத்துநர் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை.
மாணவர்களிடையே நடைபெறும் சாதிய மோதல்களை தடுக்கும் நோக்கத்தில் தனியார் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் காவல்துறை எச்சரிக்கை.