கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால்

கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் நாட்டின் மோசமான அதிபராக இருப்பார் என்று டிரம்ப் கடுமையாக தாக்கினார். அமெரிக்காவில் நவம்பர் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. தீவிர பிரசாரம் நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்காவின் துணை அதிபரும், ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளருமான கமலா ஹாரிஸ் குறித்து குடியரசு கட்சி அதிபர் வேட்பாளரும், முன்னாள் அதிபருமான டொனால்டு டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் நியூஜெர்சியில் கூறுகையில், ‘அவர் (கமலா ஹாரிஸ்) மீது எனக்கு மரியாதை இல்லை. அவரது திறமையின் மீதும் எனக்கும் திருப்தியில்லை

அமெரிக்க அதிபர் தேர்தலில் அவர் வெற்றி பெற்றால், நாட்டின் மோசமான அதிபராக இருப்பார் என்று நினைக்கிறேன். கமலா ஹாரிஸ் குறித்து தனிப்பட்ட தாக்குதல்களை நடத்துவது தவறில்லை என்று நினைக்கிறேன். அவர் மீது எனக்கு மிகவும் கோபம் உள்ளது. நாட்டுக்கு அவர்கள் என்ன செய்தார்கள்? ஒட்டுமொத்த நீதித்துறையும் எனக்கு எதிரான ஆயுதமாக தவறாக பயன்படுத்தினர். எனவே தனிப்பட்ட முறையில் அவரை தாக்குவதில் தவறில்லை. அதற்கு அவர் தகுதியானவர் தான். கமலா ஹாரிஸின் கொள்கை மிகவும் விசித்திரமானது’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published.