ப்ளூ பேலஸ் இன்டர்நேஷனல் புக் ஆப் ரெகார்ட்ஸில்
செங்கோட்டையை மூன்று வித ஓவியமாக 37 நிமிடம் 21 நொடிகளில் 70 மாணவர்களால் வரையப்பட்டு ப்ளூ பேலஸ் இன்டர்நேஷனல் புக் ஆப் ரெகார்ட்ஸில் இடம் பெற்றுள்ளது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மேனகா ஆர்ட்ஸ் அகாடமி சார்பில் 70 மாணவர்கள் பங்கேற்ற செங்கோட்டை மூன்று விதமாக வரையும் கின்னஸ் சாதனை ஓவியப் போட்டி நடைபெற்றது. 70 மாணவர்கள் சேர்ந்து மூன்று வகையில் ஒன்று ரங்கோலி, ஜூனியர் சப் ஜூனியர் மாணவர்கள் என பங்கேற்றனர்.
ரங்கோலி கொலாஜ் மற்றும் பெயிண்டிங் மூன்று விதத்தில் செங்கோட்டையை வரைந்து, சுதந்திர தினம் என்பதால் இந்திய தேசிய கொடியுடன் வரைந்தனர். ப்ளூ பேலஸ் இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் கொடுத்த நேரம் 44 நிமிடம் 32 நொடி ஆகும். இந்த சாதனையை 37 நிமிடம் 21 நொடியில் முடித்திருக்கிறோம். மாணவர்கள் சுறுசுறுப்பாகவும் விரைவாகவும் இந்த ஓவியத்தை வரைந்து முடித்தனர்.