முத்திரைத்தாள் விற்பனையாளர்
தமிழகத்தில் முத்திரைத்தாள் விற்பனையாளர் பணி குறித்த அறிவிப்பு!
தமிழகத்தில் முத்திரைத்தாள் விற்பனையாளர் பணி குறித்த அறிவிப்பு அவ்வப்போது வெளிவரும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் முத்திரைத்தாள் விற்பனையாளர் காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது
தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலக பகுதியில் முத்திரைத்தாள் விற்பனையாளர் பணியிடங்கள் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் மாவட்ட வாரியாக முத்திரைத்தாள் விற்பனையாளர் காலி பணியிடங்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது
இந்த பணியிடத்திற்கு விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் விண்ணப்ப படிவங்களை பிப்ரவரி 11-ம் தேதிக்குள் பெற்றுக் கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் பிப்ரவரி 12ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
முத்திரைத்தாள் விற்பனையாளர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்.