காங்கிரஸ் குற்றச்சாட்டு
மின் உற்பத்தி துறையில் அதானி குழுமத்துக்கு மட்டுமே சலுகை வழங்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு
மின் உற்பத்தி துறையில் அதானி குழுமத்துக்கு மட்டுமே சலுகை வழங்கப்பட்டுள்ளதாக ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு வைத்துள்ளார். ஆஸி.யில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்து ஜார்க்கண்டில் மின் உற்பத்தி செய்து அதானி குழுமம் வங்கதேசத்துக்கு விற்கிறது. இந்தியாவில் தற்போது மின்சாரத்தை விநியோகிக்கவும் அதானி குழுமத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனக்கு நெருக்கமானோருக்கு சலுகை வழங்குவதில் பிரதமர் மோடி மின்னல் வேகத்தில் செயல்படுவதாக ஜெய்ராம் ரமேஷ் புகார் அளித்துள்ளார்.