விழுப்புரம்-மதுரை ரயில் சேவை தொடக்கம்!

விழுப்புரம்-மதுரை
ரயில் சேவை தொடக்கம்!

விழுப்புரத்தில் இருந்து மதுரைக்கு தினசரி இயக்கப்பட்டு வந்த ரயில் சேவை கொரோனா பரவல் காரணமாக கடந்த 9 மாதங்களாக மூடப்பட்டு இருந்தது. தற்போது அது விரைவாக ரயிலாக மாற்றப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர் . முன்பு தினசரி 04:20மணிக்கு பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. வைரஸ் பரவல் காரணமாக கடந்த 25ஆம் தேதி முதல் இந்த ரயில் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் நிலைமை சீரடைந்து வருவதால் மீண்டும் விழுப்புரம் மதுரை இடையே ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

விழுப்புரத்தில் பிளாட்பாரம் 4 இருந்து இயக்கப்படும் இந்த ரயில் முன்பதிவு பெட்டிகளை மட்டும் கொண்டு விரைவு ரயில் பெட்டிகள் ஆக இயக்கப்படுகிறது
மாலை 4 மணிக்கு புறப்பட்டு இரவு 11 மணிக்கு மதுரை சென்றடையும். அதேபோல் புதுவையில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த விரைவு ரயில்களும் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு விழுப்புரத்தில் 6:20 வந்து சேரும். சென்னைக்கு 9 மணிக்கு சென்றடையு.ம் இதனால் சென்னைக்கு அலுவல் ரீதியாக செல்பவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.