அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பொன்.சரஸ்வதியின் கணவர் கைது
ரூ.50 கோடி நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பொன்.சரஸ்வதியின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொன்.சரஸ்வதியின் கணவர் பொன்னுசாமியை நாமக்கல் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். திருப்பூரில் தலைமறைவாக இருந்த பொன்னுசாமி குற்றப்பிரிவு போலீசிடம் பிடிபட்டார். திருச்செங்கோடு அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சரஸ்வதியின் கணவர் பொன்னுசாமி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்