தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாலக்கோடு (தருமபுரி மாவட்டம்), காட்பாடியில் தலா 14 செ.மீ. மழை பதிவானது. விழுப்புரத்தில் 13 செ.மீ., கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கல்லில் 12 செ.மீ., ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம், கலவையில் தலா 11 செ.மீ., திருத்தணி, பையூர், ஜம்புகுட்டப்பட்டி, வேம்பாக்கத்தில் தலா 10 செ.மீ., பெனுகொண்டபுரம், போச்சம்பள்ளி, அரக்கோணம், மதுராந்தகம், செங்கம், ஆற்காட்டில் தலா 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது