புதுச்சேரி மக்கள் இயக்கம்
புதுச்சேரி மக்கள் இயக்கம்
PUDUCHERRY PEOPLE MOVEMENT
இரா.தாமோதரன்
Retd.Dy.Director, DAT.,
வழக்கறிஞர்
ஒருங்கிணைப்பாளர்
12.8.2024
புதிய துணைநிலை ஆளுநர் புதுச்சேரி மாநிலத்தின் இரண்டு பெரிய ஏரிகளில் தனது முதல் ஆய்வைத் தொடங்கி இருப்பது மகிழ்ச்சிக்குரியது ! பாராட்டுக்குரியது !
புதுச்சேரி மாநிலம் முற்றாக நிலத்தடி நீரைக் குடிநீருக்காக நம்பி இருக்கிறது !
கிழக்குக் கடற்கரையை ஒட்டி வெகுதூரம் ஆழ்குழாய் கிணறுகளில் உப்பு நீர் புகுந்துவிட்டது.
நீர்நிலைகளைத் தூர்வாரி, ஆழப்படுத்தி பராமரிக்க வேண்டிய அவசியம் உள்ளது.
புதுச்சேரிக்கு கிடைக்கின்ற நீரை, மழைநீர் சேகரிப்பு திட்டம் உட்பட பல்வேறு வகைகளில்
சேமித்து பயன்படுத்த வேண்டிய தேவை உள்ளது.
புதிய துணை நிலை ஆளுநர் இந்த இன்றியமையாத பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவரது முதல் ஆய்வாக புதுச்சேரியின் இரண்டு மிகப்பெரிய ஏரிகளான ஊசுட்டேரி மற்றும் பாகூர் ஏரியை ஆய்வு செய்ததும், ஒவ்வொரு துறையாக ஆய்வு செய்து வருகிறேன் என்று கூறியதும் பாராட்டுக்குரியது ! மகிழ்ச்சிக்குரியது !
யூனியன் பிரதேசம் என்பதால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையை விட அதிக அதிகாரம் உள்ள புதுச்சேரி துணை நிலை ஆளுநராக, ஓய்வு பெற்ற முதன்மை அரசுச் செயலர், மூத்த ஐஏஎஸ் அதிகாரியாக நீண்ட அனுபவமுள்ள
திரு.K.கைலாசநாதன் அவர்களின் செயல்பாட்டால், புதுச்சேரி அரசு நிர்வாகம் சுணக்கத்திலிருந்து மீண்டு, புத்துணர்வு பெற்று மாநில வளர்ச்சிக்காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
புதிய துணைநிலை ஆளுநரின் பணி சிறக்க வாழ்த்துக்கள்!