பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடித்தால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்! – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

நமது அன்றாட வாழ்க்கையில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாக உள்ளது. மற்ற அலுமினிய, சில்வர் உள்ளிட்ட உலோக பொருட்களை விட பிளாஸ்டிக்கால் ஆன பொருட்கள் மலிவாக கிடைப்பதால் மக்கள் பலரும் பிளாஸ்டிக் பொருட்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். தண்ணீர் குடிப்பதற்கும் அவ்வாறாக பிளாஸ்டிக் பாட்டில்களையே அதிகம் பயன்படுத்துகிறோம்.

ஆனால் அவ்வாறாக பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தும்போது வெப்பமான பகுதியிலோ அல்லது மிகவும் குளிரான இடங்களிலோ பாட்டிலை வைக்கும்போது அதனால் மைக்ரோ ப்ளாஸ்டிக்குகள் தண்ணீருடன் கலப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறாக மைக்ரோ பிளாஸ்டிக் கலந்த தண்ணீரை அருந்துவதால் இதய பிரச்சினைகள், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு உள்ளிட்ட பல உடல்நல ஆபத்துகள் ஏற்படலாம் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

Leave a Reply

Your email address will not be published.