நம்மாழ்வாரின் பாதையில் பயணிப்பதே பெருமை! : நெகிழ்கிறார் மதுரை உழவர்

கருணாகரன். தனது இரண்டரை ஏக்கர் நிலத்தில் பாரம்பரிய நெல் வகைகளைப் பயிரிட்டு வருகிறார். வயலில் விளையும் நெல்லை அரிசியாக மாற்றி அவரே நேரடியாக மக்களிடம் விற்பனை செய்து வருகிறார். நோயில்லாத தலைமுறையை உருவாக்க ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது. அந்தப் பொறுப்புதான் இந்தப் பாரம்பரிய நெல் சாகுபடியில் என்னை ஈடுபட வைக்கிறது என்ற தீர்க்கமான பார்வையோடு, விவசாயப் பணியில் ஈடுபட்டு வரும் கருணாகரனை ஒரு காலைப்பொழுதில் சந்தித்தோம். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள நாட்டாமங்கலம் தான் எனது கிராமம். சிறுவயதில் இருந்தே எங்களுக்குத் தொழில் என்றால் அது விவசாயம் மட்டும்தான் என பேசத் தொடங்குகிறார் விவசாயி கருணாகரன்.“எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறேன். ஆனால் மற்றவர்களைப்போல குறுகிய காலத்தில் நிறைய மகசூல் தரும் என்று கண்ட கண்ட நெல் பயிர்களை சாகுபடி செய்ய எனக்கு விருப்பம் இல்லை. அதனால் பாரம்பரிய நெல் விதைகளைச் சேகரித்து வைத்து, அந்த விதைகளையே எனது வயலில் பயிர் செய்கிறேன். அதிலிருந்து கிடைக்கும் நெல் மற்றும் அரிசியை மற்றவர்களுக்குத் தருகிறேன். அப்படிக் கொடுப்பதில்தான் எனக்கு மகிழ்ச்சியே என்றவர் மேலும் தொடர்ந்தார்.

அனைவரும் பணம் சம்பாதிக்கும் நோக்கோடு ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் அவர்களுக்கு உணவு என்ற ஒரு விஷயத்தை இயற்கை சார்ந்ததாக மாற்ற வேண்டுமென நினைத்தேன். ஏனென்றால் வியாதி என்பது உணவு மூலமாகத்தான் பரவுகிறது. ஆகவே உணவை முழுக்க முழுக்க இயற்கை உணவாகக் கொடுத்தால் வியாதியில் இருந்து தப்பிக்கலாம் என்ற நோக்கோடு இந்த இயற்கை விவசாயத்தைக் கையில் எடுத்திருக்கிறேன்.நம்மாழ்வாரின் விவசாயப் பாதைதான் எனக்கும். இயற்கை விவசாயத்தைப் பரவலாக்க வேண்டும். அதனால் நம்மாழ்வார் விட்டுச்சென்ற பணிகளை நம்மால் முடிந்த மட்டும் தொடர வேண்டும் என நினைத்து செயல்பட்டு வருகிறேன். எனக்குச் சொந்தமாக இரண்டரை ஏக்கர் நிலம் இருக்கிறது. அந்த நிலத்தில் கருப்புக் கவுனி, கருங்குறுவை, ஆத்தூர் கிச்சிலி சம்பா, தங்கச்சம்பா, காலாபாத், வைகை குண்டான், செம்புலி சான் சம்பா, தில்லைநாயகம், மைசூர்

Leave a Reply

Your email address will not be published.