கேரளாவின் மூணாறு பகுதியில் பெரும் பாறைகள் உருண்டு விழுந்து நிலச்சரிவு..
கேரளாவின் மூணாறு பகுதியில் பெரும் பாறைகள் உருண்டு விழுந்து நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மூணாறு அருகே உள்ள கேப் ரோடு பகுதியில் இன்று காலை திடீர் மண் சரிவு ஏற்பட்டது. மண் சரிவை அடுத்து பெரும் பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாறைகள் உருண்டு விழுந்தபோது வாகனங்கள் ஏதும் சாலையில் செல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.