தற்கொலை சிகிச்சை பலனின்றி அரியநாச்சி

காரைக்குடியில் குடும்ப பிரச்னையால், உடல் முழுவதும் சூடத்தை ஏற்றி இளம்பெண் தற்கொலை செய்தது அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவர், சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள காளையப்பா நகரைச் சேர்ந்த அரியநாச்சி (27) என்பவரை, 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், தம்பதி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அரியநாச்சி காரைக்குடியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார். இந்நிலையில், குடும்ப பிரச்னையால் விரக்தியடைந்த அரியநாச்சி கடந்த 1ம் தேதி சூடத்தை தூளாக்கி தனது உடல் முழுவதும் பரப்பி தீவைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு, ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அரியநாச்சி நேற்று உயிரிழந்தார். இது குறித்து காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published.