அதிக நேரம் மின்சாரத்தை வழங்கிய மாநிலங்களின்
நாளொன்றுக்கு சராசரியாக அதிக நேரம் மின்சாரத்தை வழங்கிய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.
நகர்புற பகுதிகளில் சராசரியாக 24 மணி நேரமும், ஊரகப் பகுதிகளில் 23.5 மணி நேரமும் வழங்கப்பட்டுள்ளது. டெல்லி, கேரளா, தெலங்கானாவிலும் நகர்ப்புறங்களில் சராசரியாக 24 மணிநேரம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது