பூண்டி ஏரிக்கு நீர்வரத்து
புழல் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 95 கனஅடியில் இருந்து 143 கனஅடியாக அதிகரித்துள்ளது. பருவமழை காரணமாக புழல் உள்ளிட்ட சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஏரிகளில் நீர் இருப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனிடையே கனமழையால் 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர்இருப்பு 2,513 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 184 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 102 மில்லியன் கனஅடியாக உள்ளது. சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 10 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை ஏரியில் நீர்இருப்பு 303 மில்லியன் கனஅடியாக உள்ளது.
சென்னை குடிநீர் ஏரிகளில் 37.78% நீர் இருப்பு
சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 37.78% நீர் இருப்பு உள்ளது. 5 முக்கிய ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டிஎம்சியில் தற்போது 4,442 டிஎம்சி நீர்இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் 38.53%, புழல் – 76.15%, பூண்டி 2.57% சோழவரம் 9.43%, கண்ணன்கோட்டை 60.6% நீர்இருப்பு
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்துக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்துக்கு வினாடிக்கு 110 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. சென்னை குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 107 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது