ஸ்ரீவில்லிப்புத்தூர் வனப்பகுதியில் உள்ள சதுரகிரி
ஸ்ரீவில்லிப்புத்தூர் வனப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆடி அமாவாசையை ஒட்டி நேற்று 70,000 பக்தர்கள் சென்றுள்ளனர். கூட்ட நெரிசல் காரணமாக வனப்பகுதியில் ஆங்காங்கே பக்தர்கள் நிறுத்தப்பட்டனர். மேலும் நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க இன்று பக்தர்கள் செல்ல அனுமதி மறுப்பு. ஆயிரக்கணக்கானோர் அடிவாரத்தில் காத்திருக்கின்றனர்