சென்னை மாநகராட்சி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி
சென்னை மாநகராட்சி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தி கண்காணிக்க அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். குப்பை லாரிகள், பொக்லைன், மெக்கானிக் ஸ்வீப்பர் உள்ளிட்ட வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. வாகனங்களை ஓட்டுநர்கள் முறையாக இயக்குவதில்லை என புகார்கள் எழுந்த நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.