பைக் மீது கார் மோதியதில் 4 பேர் பலி
திண்டுக்கல் நல்லாம்பட்டி அருகே பைக் மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி..!!
நல்லாம்பட்டி பிரிவு அருகே பைக் மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். பைக் மீது கார் மோதிய விபத்தில் ஜார்ஜ், அருணா தம்பதி மற்றும் அவர்களின் இரு குழந்தைகள் பலியாகினர். 6 வயது மகன், 10 வயது மகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த மேலும் மூவர் படுகாயங்களுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.