ஊருக்குள் புகுந்த வெள்ள நீர்
கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் திறப்பு: ஊருக்குள் புகுந்த வெள்ள நீர்: மக்கள் அவதி
மேட்டூர் அணையிலிருந்துகொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்பட்டதால் கொள்ளிடம் கரையோர கிராமங்களான பெராம்பட்டு, திட்டுக்காட்டூர் மற்றும் கீழகுண்டலபாடி பகுதிகளில் வெள்ளநீர் வீடுகளில் புகுந்ததால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மருத்துவ முகாம்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.