அரசு வங்கியில் அதிகாரி ஆகணுமா; பட்டப் படிப்பு இருந்தால் போதும்; 4,465 பேருக்கு சூப்பர் வாய்ப்பு.
தேசிய வங்கிகளான பேங்க் ஆப் பரோடா, பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் மஹாராஷ்டிரா, கனரா பேங்க், சென்ட்ரல் பேங்க் ஆப் இண்டியா, இந்தியன் பேங்க், பஞ்சாப் நேஷனல் பேங்க், யூனியன் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் அன்ட் சிந்து பேங்க், யு.சி.ஓ. பேங்க் உள்ளிட்ட வங்கிகளில் மொத்தம் 4,465 அதிகாரி பணியிடங்களுக்கு ஆட்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு.
ஐ.பி.பி.எஸ்., (IBPS) நடத்தும் இந்த பணியிடங்களுக்கான தேர்வு வரும் நவம்பர் மாதம் நடைபெற இருக்கிறது.
முன்னதாக, அக்டோபர் மாதத்தில் ஆன்லைனில் ஆரம்பநிலைத் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இதற்கு செப்டம்பரில் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் சென்னை,
கோவை, திருச்சியில் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தத் தேர்வுக்கு இன்று முதல் வரும் 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.